Asianet News TamilAsianet News Tamil

டார்க் காமெடி படத்தில் நடிகர் சத்யராஜுடன் இணையும் இளம் நடிகர் வெற்றி!

சத்யராஜ், மற்றும் வெற்றி இணையும் டார்க் காமெடி படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
 

First time sathyaraj and vetri join hands in dark comedy movie mma
Author
First Published Jan 3, 2024, 5:40 PM IST

அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

First time sathyaraj and vetri join hands in dark comedy movie mma

சூர்யா திருமணத்திற்கு விஜயகாந்தை அழைக்க சென்ற சிவகுமார்! வர முடியாது என கூறிய கேப்டன்.. ஏன் தெரியுமா?

ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

First time sathyaraj and vetri join hands in dark comedy movie mma

துபாயில் இருந்து வந்த கையேடு... விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்

டார்க் காமெடிய படமாக எடுக்கப்பட உள்ள இந்த படத்தில், சத்யராஜுடன் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளார், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான 8 தோட்டாக்கள் புகழ் 'வெற்றி'. தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் வெற்றி ஆலன் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையேடு, இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios