ஆதார் கார்டு மோசடியில் சிக்கினா அக்கவுண்ட்டே காலி... பாதுகாப்புக்கு நிபுணர்கள் தரும் டிப்ஸ்!

First Published | May 20, 2024, 2:38 PM IST

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் போலவே மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் ஆதார் கார்டு மூலம் தங்கள் கைவரிசையைக் காட்டுவது வாடிக்கையாகி வருகிறது. இதிலிருந்து தப்பி, பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம்.
 

Aadhaar Card

ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பாதுகாப்பது தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் அதைப் பயன்படுத்த முயற்சி செய்வதைத் தடுப்பதற்கும் மிகவும் அவசியம். வழக்கமாக பயன்படுத்தாத கணினிகளில் ஆதார் அட்டை விவரங்களை சேமித்து வைக்கக்கூடாது.

Aadhaar Safety

தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் ஆதார் அட்டையுடன் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் உறுதிபடுத்த வேண்டும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை ஏதும் தென்பட்டால் விரைவான நடவடிக்கை எடுக்க மொபைல் என் அப்பேட் செய்யப்பட்டிருப்பது முக்கியம்.

Tap to resize

Aadhaar Card Scams

ஆதார் ஆணையத்தின் இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட வேண்டும். அதில் உங்கள் ஆதாரின் கணக்கில் ஏதேனும்  சந்தேகத்திற்கிடமான பயன்பாடு இருக்கிறதா என்று கண்காணிக்கலாம். இணையதளத்திலேயே உடனடியாக புகார் அளிக்கவும் முடியும்.

Aadhaar Card Frauds

டெலிவரி அல்லது சரிபார்ப்புக்காக ஆதார் எண்ணை கோரும் நபர்களுக்கு கண்டிப்பா ஆதார் விவரங்கள் எதையும் அளிக்கக்கூடாது. தேவைப்பட்டால், முக்கியமான விவரங்களை மறைக்கும் masked ஆதார் கார்டை வழங்கலாம். இதையும் ஆதார் இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம்.

Aadhaar Card Security

அரசு நிறுனவங்கள் சார்பாகப் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் நபர்கள் OTP, ஆதார் விவரங்கள், வங்கி கணக்கு எண் போன்றவற்றைக் கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையான அதிகாரிகள் இதுபோன்ற தகவல்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.

UIDAI

சமூக ஊடகங்களில் ராணுவம் அல்லது காவல்துறை அதிகாரி என்று பொய் சொல்லிக்கொண்டு மோசடியில் ஈடுபடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகின்றன. எனவே சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் ஆதார் கார்டை பகிர்வதைத் தவிர்க்கவும்.

Latest Videos

click me!