UPI மூலம் பணம் பறிக்கும் சைபர் கிரிமினல்ஸ்! பேமெண்ட் செய்யும்போது ஒரு செகண்ட் இதை செக் பண்ணுங்க!

First Published | May 14, 2024, 11:45 AM IST

UPI பேமெண்ட் பயன்பாடு அதிகரித்துள்ளதைப் போலவே சைபர் கிரைம் குற்றவாளிகள் அதை தங்கள் வசதிக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற முறைகேடுகளில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

UPI Payment Frauds

UPI பேமெண்ட் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. மால்களில் தொடங்கி சாலையோட தள்ளுவண்டி கடைகள் வரை பணம் செலுத்துவதற்கு UPI வசதி வந்துள்ளது. ஏப்ரல் 2024 வரை இந்தியாவில் 13.3 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், UPI பரிவர்த்தனைகளின் அதிகரிப்புடன், UPI மோசடிகளும் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டில் 95,000 UPI மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் UPI மோசடிகளை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதியவருக்கு ரூ.2,000க்கு மேல் அனுப்பும்போது நான்கு மணிநேர கால வரம்பை ஆர்.பி.ஐ. முன்மொழிந்துள்ளது.

Tap to resize

UPI மோசடியில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது ஃபிஷிங். பிரபலமான பிராண்டுகளைப் போல போலியாக லிங்க் உருவாக்கி, அதை கிளிக் செய்பவர்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கிறார்கள். எனவே எந்த இணைப்பையும் கிளிக் செய்யும் முன் அது நம்பகமானதா என்று யோசியுங்கள்.

UPI பரிவர்த்தனை வசதியை வழக்கும் BHIM போன்ற செயலிகளைப் போல போலி அப்ளிகேஷன்களை உருவாக்கியும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோர் போன்ற அதிகாரபூர்வமான தளங்களில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்.

UPI மூலம் பணம் செலுத்தும் போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்கிறோம். இதிலும் மோசடி செய்கிறார்கள். எனவே QR குறியீட்டின் மூலம் பேமெண்ட் செய்யும்போது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கவும்.

Government Releases List Of Countries Where UPI Payments Are Accepted

விஷிங் முறையிலும் UPI மோசடி அதிகரித்து வருகிறது. ஆடியோ அல்லது வீடியோ காலில் தொடர்புகொண்டு லாட்டரி / பரிசு /ரிவார்டு கிடைத்திருப்பதாகக் கூறி நம்ப வைப்பார்கள். பரிசைப் பெற முன்கூட்டியே ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் என்று சொல்லி, பணம் கிடைத்ததும் மாயமாகிவிடுவார்கள்.

எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு முன், பணத்தைப் பெறுபவரின் UPI ஐடியை உறுதிப்படுத்தவும். சரியாக உறுதிப்படுத்தாமல் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும். மொபைலில் தேவையற்ற ஆப்ஸை நிறுவுவதையும் தவிர்க்கவும்.

UPI Payment Update

UPI மோசடியைத் தடுக்க, பாதுகாப்பான நெட்வொர்க்குகளை மட்டுமே பயன்படுத்தவும். பொது இடங்களில் உள்ள வைஃபை மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஒருவேளை UPI மோசடியில் பணத்தை இழந்துவிட்டதாக உணர்ந்தால், உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலுக்குச் சென்று புகார் அளிக்கவும். அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கவும்.

Latest Videos

click me!