கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது செலவு செய்வதில் வசதியாக்குவதோடு, வங்கிகள் வழங்கும் சலுகைகள் மற்றும் ரிவார்டு புள்ளிகளையும் வழங்குகிறது. ரிவார்டு புள்ளிகள் நிதி சார்ந்த பலன்களை அளிக்கும் அதே வேளையில், சில மோசடி பேர்வழிகளுக்கும் வசதியாக இருக்கிறது. இந்நிலையில், ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் பெயரில் நடக்கும் மோசடி குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் மோசடிக்காரர்களை அடையாளம் கண்டு, இழப்புகளைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஆக்சிஸ் வங்கி எடுத்துரைத்துள்ளது.