மழை பெய்யும் போது AC ஆன் பண்ணலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

First Published | May 16, 2024, 4:19 PM IST

மழை பெய்யும் நேரத்தில் வீட்டில் AC பயன்படுத்தலாமா கூடாதா என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். இது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Air conditioner

கோடை காலம் என்பதால் பல வசதியான வீடுகளில் AC பயன்படுத்துகிறார்கள். கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. ஆனால், இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது AC பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.

Air conditioner

எந்த வகை ஏசியாக இருந்தாலும் லேசான மழை பெய்யும் போது அதை பயன்படுத்தினால் ஆபத்து ஏதும் இல்லை. வெளிப்புற ஏசி யூனிட்டில் இருக்கும் தூசி லேசான மழையில் சுத்தமாகிவிடும்.

Latest Videos


Air conditioner

ஆனால், கனமழை பெய்யும் ஏசி வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பலத்த மழை பெய்யும்போது ஏசியின் வெளிப்புற யூனிட் நேரடியாக மழையில் நனையாமல் இருக்க வேண்டும்.

ஏசியின் வெளிப்புற யூனிட்டுகள் மழையைத் தாங்கக்கூடிய அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தாலும் பல முறை மழையில் நனையும்போது ஓரளவு சேதம் அடையும். எனவே ஏசியின் வெளிப்புற யூனிட் மழை நீர் விழாத இடத்தில் வைக்க வேண்டும்.

Air conditioner

ஒருவேளை ஏசியின் வெளிப்புற யூனிட்டை மழை படமால் வைக்க வீட்டில் வசதியான இடம் இல்லை என்றால் அதிக அளவு மழை பெய்யும்போது AC பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

Air conditioner

மழைக்காலத்தில் வயரிங் பிரச்சினை ஏற்படக்கூடும். அப்படி ஏற்பட்டால், ஏசியை அணைத்துவிட்டு வயரிங்கை சரிசெய்த பிறகுதான் ஏசியைப் பயன்படுத்த வேண்டும்.

click me!