பொங்கல் ரேஸில் ‘அயலான்’ அடிவாங்கியதா? அடிச்சு தூக்கியதா? - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ

First Published Jan 13, 2024, 8:29 AM IST

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வந்துள்ள அயலான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

ayalaan

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சையின்ஸ் பிக்சன் திரைப்படமான இதை ரவிக்குமார் இயக்கி உள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

Ayalaan Pongal Release

அயலான் திரைப்படம் சுமார் 6 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் விஎப் எக்ஸ் காட்சிகள் மட்டும் 4 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. தமிழ் சினிமாவில் இத்தனை வி எப் எக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இது பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆகி உள்ளதால் இதற்கு தினசரி ஒரு சிறப்பு காட்சி மட்டும் திரையிட்டுக் கொள்ள தமிழக அரசும் அனுமதி அளித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் 6 ஆண்டு காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? அயலான் சூப்பரா... சுமாரா? முழு விமர்சனம் இதோ

Ayalaan Sivakarthikeyan

இதனால் நேற்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் அயலான் படம் கோலாகலமாக ரிலீஸ் ஆனது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர். படம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Ayalaan Day 1 Box Office Collection

அதன்படி அயலான் திரைப்படம் முதல் நாளில் ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது சிவகார்த்திகேயனின் முந்தைய படமான மாவீரன் படத்தின் முதல் நாள் வசூலை விட கம்மியாகும். மாவீரன் திரைப்படம் முதல் நாளில் ரூ.8 கோடி வரை வசூலித்து இருந்தது. ஆனால் அயலான் அதில் பாதி மட்டுமே வசூலித்து இருக்கிறது. இருப்பினும் இன்னும் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை உள்ளதால் அயலான் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மக்களை நெகிழவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தில் கேப்டன் விஜயகாந்த்? வாழ்த்தி செல்லும் ரசிகர் கூட்டம்!

click me!