மக்களை நெகிழவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தில் கேப்டன் விஜயகாந்த்? வாழ்த்தி செல்லும் ரசிகர் கூட்டம்!
Captain Vijayakanth In Ayalaan : சுமார் 6 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இன்று ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு "இன்று நேற்று நாளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கிய ஆர். ரவிக்குமார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் உருவாக்க துவங்கிய திரைப்படம் தான் "அயலான்". இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் 14வது திரைப்படமாக வெளியாக இருந்தது. இருப்பினும் அப்போதைய தொழில்நுட்ப வசதியின்மை காரணமாக சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்த திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. உண்மையில் இந்த திரைப்படத்தில் அமைக்கப்பட்டுள்ள சிஜி காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். சுமார் 4500க்கும் மேற்பட்ட விசுவல் எபெக்ட் காட்சிகள் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் கதாபாத்திரத்திற்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி மிக அருமையாக செயல்பட்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இரண்டாம் பாதியில் சில இடங்களில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது அயலான். கிளைமாக்ஸ் காட்சியும் முதல் பாதியில் வரும் பல காட்சிகளும் சுவாரசியமாக இருக்கிறது என்றும் வில்லன் கதாபாத்திரம் இன்னும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் அனைவரும், குறிப்பாக குழந்தைகள் அனைவரும் கண்டு மகிழும் விதத்தில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட குழு இந்த படத்தில் மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செய்துள்ளது குறித்து தற்பொழுது பொதுமக்கள் பெரிய அளவில் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் தோன்றும் ஒரு காட்சியில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு படக்குழுவின் சார்பாகவும், சிவகார்த்திகேயனின் சார்பாகவும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் நிறுவனத்தின் சார்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.