சிவகார்த்திகேயனின் 6 ஆண்டு காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா? அயலான் சூப்பரா... சுமாரா? முழு விமர்சனம் இதோ
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் கெரியரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது அயலான் தான். ஏனெனில் கடந்த 2017-ம் ஆண்டு இப்படம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2018-ல் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு, பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டனர். கொரோனாவுக்கு பின்னர் மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 6 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அயலான் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... அயலான் vs கேப்டன் மில்லர்... பொங்கல் ரேஸில் மிரட்டியது யார்? சொதப்பியது யார்? டுவிட்டர் விமர்சனம் இதோ
அயலான் படத்தின் முதல் பாதி நீட்டாகவும், சுமார்ட் ஆகவும் இருந்தது. இரண்டாம் பாதி அருமையாக இருந்தது. ரவிக்குமாரின் திரைக்கதை தான் படத்தின் ஹீரோ. சிவகார்த்திகேயனின் நடிப்பு வேறலெவல். சிஜி பிரம்மிக்க வைத்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசை வெறித்தனமாக இருந்தது. படம் பிளாக்பஸ்டர் என பதிவிட்டுள்ளார்.
அயலான் படத்தின் முதல் பாதியில் எஸ்.கே.வின் இண்ட்ரோ சிம்பிளாக இருந்தது. ஃபீல் குட் வைப் கொடுத்தது. அயலான் படத்திற்குள் வந்த பின்னர் படம் கலகலப்பானது. ஏ.ஆர்.ரகுமானின் இசை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். பழைய படம்போல் தெரியவில்லை. காட்சிகள் அனைத்தும் பிரஸ் ஆகவே இருந்தன. முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமையாக இருந்தது. விஎப் எக்ஸ் குழுவுக்கு வாழ்த்துக்கள். ஏலியன் பார்ப்பதற்கு தத்ரூபமாக இருந்தது. கொடுத்த காசுக்கு ஒர்த்தாக இருந்தது. கிளைமாக்ஸ் எமோஷனலாக இருந்தது. சிவகார்த்திகேயனின் நடிப்பு டாப் கிளாஸாக இருந்தது என பாராட்டி உள்ளார்.
அயலான் என்ன ஒரு அருமையான திரைப்படம். மாஸ் காட்சிகள் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பேமிலி ஆடியன்ஸை டார்கெட் பண்ணி எடுத்துள்ளார்கள். இதுமட்டும் தனியாக ரிலீஸ் ஆகி இருந்தால் கண்டிப்பாக 200 கோடி அடித்திருக்கும். ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் டல் அடிக்கின்றன. மற்றபடி அயலான் பொங்கல் வின்னர் என பதிவிட்டுள்ளார்.
அயலான் படத்தின் முதல் பாதியில் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. குழந்தைகளுக்கு இப்படம் ட்ரீட் ஆக அமைந்துள்ளது. குழந்தைகள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் சிறப்பான இசையை கொடுத்துள்ளார் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அயலான் படம் நூறு சதவீதம் பிளாக்பஸ்டர் ஹிட் தான் என குறிப்பிட்டு 5க்கு 4.25 மதிப்பெண் கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், படத்தின் முதல் பாதி தரமாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி மிரட்டலாக இருந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... 3 நாள் இடைவிடா கொண்டாட்டம்... ஜீ தமிழின் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ