அயலான் vs கேப்டன் மில்லர்... பொங்கல் ரேஸில் மிரட்டியது யார்? சொதப்பியது யார்? டுவிட்டர் விமர்சனம் இதோ
பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படம் சுமார் 7 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் சையின்ஸ் பிக்சன் கதையம்சத்துடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களின் முதல் காட்சி பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் காலை 7 மணிக்கே தொடங்கிவிட்ட நிலையில், அதன் முதல் பாதி விமர்சனங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன. அதை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 பேரை கவுரவித்து கார்த்தி!
அயலான் விமர்சனம்
அயலான் திரைப்படத்தின் முதல் 15 நிமிடங்கள் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளது. ஆனால் எஸ்.கே. ஏலியனை சந்தித்தபின்னர் படம் தெறிக்கிறது. நிறைய காமெடிகள் உள்ளன. சிறப்பான ரைட்டிங். கிரியேட்டிவிட்டி படத்தின் சாதாரண காட்சியையும் சிறப்பாக்கி உள்ளது. வில்லன் தான் போர் அடிக்கிறார். இண்டர்வெல் டுவிஸ்ட் வேறலெவல் என பதிவிட்டு உள்ளார்.
அயலான் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். முதல் பாதி வேறமாரி இருக்கிறது. எஸ்.கே இண்ட்ரோ வாவ் ரகம். ரவிக்குமார் ரைட்டிங்கால் இண்டர்வெல் காட்சி மெர்சலாக உள்ளது. ஏலியன் சிஜி மற்றும் விஎப் எக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன. ஏலியன் உடனான காமெடி படத்தை சோர்வில்லாமல் வைத்துள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், அயலான் படத்தில் ரவிக்குமாரின் ரைட்டிங், இண்டர்வெல் சீன், ஏலியன் காமெடி மற்றும் திரைக்கதை ஆகியவை பாசிட்டிவ் ஆக அமைந்துள்ளன. அதேபோல் வில்லன் டெம்பிளேட் தான் நெகடிவ் ஆக உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
கேப்டன் மில்லர் விமர்சனம்
கேப்டன் மில்லரின் தனுஷின் ஸ்கிரீன் பிரெசன்ஸும், ஜிவி பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசையும் வெறித்தனமாக உள்ளது. 20 நிமிட இண்டர்வெல் பிளாக் காட்சி புல்லரிக்க வைக்கிறது. திரைக்கதை வேறலெவல் என குறிப்பிட்டு முதல் பாதிக்கு 5க்கு 4 மதிப்பெண்ணும் கொடுத்திருக்கிறார்.
கேப்டன் மில்லர் துவக்கத்தில் மெதுவாக ஆரம்பித்தாலும், இண்டர்வெல் நெருங்க நெருங்க வெறித்தனமாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை மற்றும் வில்லன் கேங்கின் பங்களிப்பு முதல் பாதியை தூக்கி நிறுத்துகிறது என குறிப்பிட்டு உள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. தனுஷ் நடிப்பில் பின்னிபெடலெடுத்து இருக்கிறார். அருண் மாதேஸ்வரனின் கதை சொல்லலும் அருமையாக உள்ளது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் சித்தார்த் நூனியின் ஒளிப்பதிவு சூப்பர். ஸ்லோவாக ஆரம்பித்து பிக் அப் ஆகி இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 43 வயதிலும் கவர்ச்சியை வைத்து கல்லாகட்டும் கிரண்... முரட்டு சிங்கிள் நடிகைக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா