3 நாள் இடைவிடா கொண்டாட்டம்... ஜீ தமிழின் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ

பொங்கல் பண்டிகைக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூன்று நாட்கள் ஒளிபரப்பப்பட உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

Pongal mattu pongal and bhogi festival special Programs and Movies in Zee Tamil gan

தமிழ் சின்னத்திரை முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதேபோல் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பதிலும் ஜீ தமிழ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. 

அந்த வகையில் இந்த வருட பொங்கலுக்கு போகி பண்டிகை நாளிலிருந்தே சிறப்பு திரைப்படத்துடன் கொண்டாட்டத்தை தொடங்க உள்ளது ஜீ தமிழ். தொடர்ந்து மூன்று நாட்கள் அப்படி என்னென்ன ஸ்பெஷல்? ஒளிபரப்பாக போகும் சிறப்பு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று மதியம் 3.30 மணிக்கு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி என எக்கச்சக்கமான திரையில் உலக பிரபலங்கள் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான ஜவான் திரைப்படத்துடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்க உள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி தைத்திருநாள் அன்று காலை 8:30 மணி முதல் பத்து மணி வரை சுகி சிவம் தலைமையில் நமது குடும்ப அமைப்பில் பெரும் மாற்றங்கள் தேவை, தேவையில்லை என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. 

இதையும் படியுங்கள்... அயலான் vs கேப்டன் மில்லர்... பொங்கல் ரேஸில் மிரட்டியது யார்? சொதப்பியது யார்? டுவிட்டர் விமர்சனம் இதோ

அதை தொடர்ந்து காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவு கூறும் வகையில் திரளான பிரபலங்கள் பங்கேற்கும் சல்யூட் டூ கேப்டன் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நல்ல மனிதராக நடிகனாக, நண்பனாக, வழிகாட்டியாக, தலைவனாக, என ஒவ்வொரு விதத்திலும் விஜயகாந்த்தின் குணத்தை பற்றி பிரபலங்கள் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் பங்கேற்க இருக்கின்றனர். 

இதன் தொடர்ச்சியாக மதியம் 12:30 மணி முதல் 4:00 மணி வரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து கலக்கிய மெகா ஹிட் சூப்பர் திரைப்படமான மார்க் ஆண்டனியின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது. பிறகு மதியம் 4:00 மணி முதல் 7 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 

மறுநாள் மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16ம் தேதி காலை 8:30 மணிக்கு சுகி சிவம் தலைமையில் கிராமங்கள் நகரங்களாவது கொடையா? கொடுமையா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து காலை 10 மணி முதல் 12:30 மணி வரை சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 3-ன் வெற்றி கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும் மதியம் 12:30 மணி முதல் 4.00 மணி வரை ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரன் படத்தின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ச்சியாக மதியம் 4 மணி முதல் 7 மணி வரை ஜில்லுனு ஒரு காதல் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து கலக்கிய பத்து தல திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்... விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? முதல்முறையாக வெளியான புகைப்படம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios