காங். மாவட்ட தலைவர் மரணத்தில் திருப்பம்... தற்கொலையல்ல.. கொலை.?? பிரேதபரிசோதனை அறிக்கையில் வெளியான ஷாக் தகவல்

By Ajmal Khan  |  First Published May 7, 2024, 10:31 AM IST

காங்கிரஸ் மாவட்ட் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் எரிந்த உடலில் குரல்வலை முற்றிலுமாக எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 


ஜெயக்குமார் மரணம்- போலீஸ் விசாரணை

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் இரண்டு நாட்களாக காணவில்லையென போலீசாரிடம் அவரது மகன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார்  மூன்று கடிதம் எழுதி இருந்தார்.  அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் தனக்கு தர வேண்டிய பணம் தொடர்பாகவும், இதே போல தான் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் தெரிவித்து இருந்தார்.

Latest Videos

undefined

காங்.நிர்வாகிகளுக்கு சம்மன்

தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் மரணவாக்கும் மூலம் என்ற தலைப்பில் நெல்லை மாவட்ட எஸ்பி-க்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்த சூழ்நிலையில்  ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா கொலையா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் நிர்வாகி தனுஷ்கோடி ஆதித்தன், தங்கபாலு, ரூபி மனோகரன் உள்ளிட்ட 30 பேருக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.  இந்த சூழ்நிலையில் பாதி எரிந்த நிலையில் மீட்க்கப்பட்ட ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,  பாதி எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட  சடலத்தில் குரல்களை முற்றிலுமாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

ஏற்கனவே இறந்த உடலை எரித்தால் மட்டுமே குரல் வலை முற்றிலுமாக எரியும் என கூறப்பட்டுள்ளது. எனவே ஜெயக்குமாரை யாரோ ஒருவர் கடத்தி சென்று கொலை செய்த பின்னர் தோட்டத்திலேயே வைத்து எரித்து இருக்கலாம் என காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இருந்த போதும் விசாரணைக்கு பிறகே  அடுத்த கட்டம் தொடர்பாக தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஜெயக்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவின் அடிப்படையிலேயே ஜெயக்குமார் மரணம் கொலையா.? தற்கொலையா என்று தெரிய வரும் என கூறப்படுகிறது. 

திருப்பத்தூர்: திருமணமாகி 1 ஆண்டு கூட ஆகல.. பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை

 

 

click me!