தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

By SG Balan  |  First Published May 7, 2024, 10:01 AM IST

வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது. சில மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டு வெயில் கொளுத்துகிறது.

Tap to resize

Latest Videos

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது. சேலம், காஞ்சீபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசம் கூடும் என 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 10ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி முதல் 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளது.

செம டான்ஸ்... நானும் என்ஜாய் பண்றேன்! மம்தாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

அதே சமயம் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளையும் (புதன்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மே 12ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

ஆக்சிஜன் வால்வில் கோளாறு... சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளிப் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து!

click me!