Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு மரண பயம் காட்டிய விபத்து...காருடன் நேருக்கு நேர் மோதிய பகீர் வீடியோ காட்சி

Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு மரண பயம் காட்டிய விபத்து...காருடன் நேருக்கு நேர் மோதிய பகீர் வீடியோ காட்சி

Published : May 07, 2024, 08:41 AM IST

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் போது நடைபெற்ற விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சவுக்கு சங்கர் கைது

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் அரசியல் தொடர்பான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவர், இவர் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை கூறி வந்தார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட தலைவர்களையும் விமர்சித்து கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் அதிகளவில் பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உண்மைக்கு மாறான தகவல்களையும், அரசியல் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் விமர்சிக்க தொடங்கினார். இதன் காரணமாக சவுக்கு சங்கரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தான் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தவர் பெண் காவலர்கள் தொடர்பாக தவறாக பேசினார். 

விபத்தில் சிக்கிய வாகனத்தில் வீடியோ

இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்ந்த கோவை போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதிகாலை நேரத்தில் கைது செய்து சவுக்கு சங்கரை போலீஸ் வேனில் அழைத்து வந்தனர். அப்போது போலீஸ் வேன் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கும் சிறிது காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வேன் நடு ரோட்டில் கார் மீது மோதும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
Read more