Rj Bravo: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை விஷயம் இருக்கா? இதுவரை யாரும் சொல்லாத ரகசியங்களை உடைத்த ஆர்.ஜே.பிராவோ!

First Published Apr 12, 2024, 5:56 PM IST

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு எப்படிப்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன, என்பது குறித்து... இதுவரை நமக்கு தெரியாத பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் ஆர்.ஜே.பிராவோ.
 

கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு போட்டியாளராக 28-ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் ஆர்.ஜே.பிராவோ. தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வெளிநாட்டில் உள்ள FM ரேடியோவில் தமிழ் ஆர்.ஜே-வாக பணியாற்றி பிரபலமானவர். பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல், உள்ளே வந்த சில வாரங்களிலேயே வெளியேறினார்.
 

இந்நிலையில் இவர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இதுவரை பிக்பாஸ் குறித்து யாரும் சொல்லாத சில விஷயங்களை கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவர் போட்டியாளராக செல்கிறார் என்றால், அவர்களை ஒரு நாளுக்கு முன்பே ஹோட்டலில் தனிமை படுத்திவிடுவார்களாம்.

Sayaji Shinde: நெஞ்சுவலி காரணமாக பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

அவர்கள் எடுத்து வரும் உடைமைகள் உடைகளை பிக்பாஸ் குழுவினர் ஒன்று விடாமல் பரிசோதித்த பின்னரே உள்ளே எடுத்து செல்ல அனுமதிப்பார்களாம். அதே போல் செல்போன் வாங்கப்படும் என பிக்பாஸ் கூறி இருந்தாலும், ஹோட்டலுக்கு வந்த உடனே வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பு தான் வாங்கியுள்ளனர்.
 

பிக்பாஸ் வீட்டில் போடும் உடைகளிலும் சில நிபந்தனைகள் உள்ளதாம். அதாவது Nike, puma, என பெயர் போட்ட பிராண்டட் உடைகளை போட கூடாதாம். சின்னதாக ஏதாவது பெயர் எழுதி இருந்தாலும் அதனை மறைத்து ஸ்ட்ரிக்கர் ஒட்டி விடுவார்களாம். உள்ளே செல்லும் போட்டியாளர், ஒரே வாரத்தில் வெளியேறினாலும் கூட, 30 நாட்களுக்கு தேவையான உடைகளை எடுத்து செல்ல வேண்டும் என்பது ரூல் என தெரிவித்துள்ளார். 

22 வருடங்களுக்கு பின் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹிட் கொடுத்த சீயான்!

BB Tamil 7

மேலும் உடல் நலன் சரி இல்லை என்றால், மருந்து மாத்திரை கொண்டு சென்றாலும்... அவற்றை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். எந்த நேரத்தில் மாத்திரை போட வேண்டுமோ அப்போது அவர்களுக்கான மறுத்து ஸ்டோர் ரூமில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதே போல் பிக்பாஸ் வீட்டில் அதிக டிசைன் போட்ட உடைகள் போட கூடாது, குறிப்பிட்ட சில நிற உடைகளை அணிய கூடாது என நிபந்தனைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் சில போட்டியாளர்கள் பிக்பாஸ் குறித்து கூறியுள்ள போதிலும், இது போன்ற தகவலை கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!