40 கனெக்டிவிட்டி ஆப்ஷன்ஸ்... தூள் கிளப்பும் மைலேஜ்... புதிய ஸ்விப்ட் காரை களமிறக்கிய மாருதி சுஸுகி!

First Published | May 9, 2024, 3:17 PM IST

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த காரின் சிறப்பு அம்சங்கள் உள்ளிட விவரங்களைப் பார்க்கலாம்.

Maruti Suzuki Swift in India

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இன்று சந்தைக்கு வந்துள்ளது.

Maruti Suzuki Swift launched

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட். இதன் நான்காம் தலைமுறை கார் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tap to resize

2024 Maruti Suzuki Swift

ஹேட்ச்பேக் ரகத்தைச் சேர்ந்த இந்த காரின் பிரீமியம் வேரியண்ட் ரூ.9.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. மாதத்திற்கு ரூ.17,436 முதல் செலுத்தி EMI முறையிலும் இந்தக் காரை சொந்ததமாக்கிக்கொள்ளலாம்.

The epic new Swift from Maruti Suzuki

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் புதிய Z-சீரிஸ் 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது அதிகபட்சமாக 82PS ஆற்றலையும் 113Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் முன்பு போலவே உள்ளன (5-ஸ்பீடு MT மற்றும் 5-ஸ்பீடு AMT).

New Maruti Suzuki Swift price in India

நான்காம் தலைமுறை மாருதி சஸுகி ஸ்விஃப்ட் காரின் எரிபொருள் திறன் தற்போது அதிகரித்துள்ளது. 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மைலேஜ் 5-ஸ்பீடு MT எடிஷனில் லிட்டருகு 24.8 கி.மீ. ஆகவும், 5-ஸ்பீடு AMT எடிஷனில் லிட்டருக்கு 25.75 கி.மீ. ஆகவும் இருக்கிறது.

Maruti Suzuki Swift specifications

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் 40 க்கும் மேற்கட்ட கனெக்டிவிட்டி வசதிகள் உள்ளன. டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு புதிய ஸ்விப்ட் கார் கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Latest Videos

click me!