முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காஜல் அகர்வால்... லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

First Published May 9, 2024, 3:21 PM IST

லேட்டஸ்ட் புகைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

kajal aggarwal

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், திருமணத்துக்கு பின்னர் மார்க்கெட் இழந்துவிட்டார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

Indian 2 actress kajal aggarwal

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் திருமணத்துக்கு முன்னரே கமிட் ஆனார் காஜல், அதன் ஷூட்டிங் சில பிரச்சனைகள் காரணமாக தாமதம் ஆனாலும் தற்போது ஒருவழியாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இப்படத்தை வருகிற ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : தொடரும் வசூல் வேட்டை... ரஜினி படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை 4

Actress kajal aggarwal

தமிழில் இந்தியன் 2 படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் காஜல் அகர்வால். அப்படத்தின் ரிசல்டை பொறுத்து தான் அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும். தற்போதைக்கு அவர் கைவசம் தெலுங்கில் பாலகிருஷ்ணா படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

kajal aggarwal Latest Photo

அந்த புகைப்படத்தில் முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி காட்சியளிக்கிறார் காஜல் அகர்வால். அதைப்பார்த்த ரசிகர்கள் இது காஜல் அகர்வால் தானா என கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அவர் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா என்றும் முகத்துக்காக ஏதேனும் சிகிச்சை எடுத்துக்கொண்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... Sai Pallavi Birthday: சாய் பல்லவி 'தண்டேல்' ஷூட்டிங்கில் செய்த அமர்க்களம்! படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!

click me!