Savukku : முன் ஜாமின் மறுப்பு... சவுக்கு சங்கரை தொடர்ந்து மற்றொரு யூடியூப் பிரமுகரை தட்டித்தூக்க போகும் போலீஸ்

By Ajmal Khan  |  First Published May 9, 2024, 3:26 PM IST

பெண் காவலர்கள் தொடர்பாக விவாதம் நடத்திய Redpix Youtube Channel பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து  முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் முன்ஜாமின் வழங்க நீதிபதி மறுத்துள்ளார்.  
 


பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபர யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டும் வருகிறார்.  இந்தநிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய Redpix Youtube Channel பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக  பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tap to resize

Latest Videos

முன் ஜாமின் மறுத்த நீதிபதி

இந்தநிலையில் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில்பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி குமரேஷன் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய Redpix Youtube Channel பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். யூடியூப் சேனல்கள் பொறுப்பெற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த Redpix youtube channel பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது என கூறி காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார காலம் ஒத்தி வைத்துள்ளார்.

Katchatheevu : அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்கள் போலியா.? கச்சத்தீவு விவகாரத்தில் வெளியான ஷாக் தகவல்
 

click me!