ராட் வீலர் நாய் கடித்த 5 வயது சிறுமிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு நன்றாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியான ரகு என்பரின் 5 வயது மகள் சுதக் ஷா ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்ட ரேட்வில்லர் என்ற இரண்டு நாய் உடன் பூங்காவிற்கு வந்துள்ளார். இரண்டு நாயை கயிறு கட்டி அழைத்து வராமல் இருந்துள்ளார்.
அப்போது நாய் சிறுபி சுதக் ஷாவை கடித்து குதறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் நாயிடம் இருந்து தனது குழந்தையை மீட்க போராடியுள்ளார். இருந்த போதும் நாய் விடாமல் கடித்ததில் சிறுமியில் தலையில் ஒரு பகுதி மோசமாக பாதிக்கப்பட்டது.
undefined
115 கோடியில் கட்டப்பட்ட பாலம்; மழைநீர் வடிய வழி இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
சிறுமி முதலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர், குழந்தைக்காகும் முழு மருத்துவ செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். அவரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கலாம் என தெரிவித்தார். அதனைத் தொடா்ந்து சிறுமி கடந்த 6ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விளையாட்டில் மோதல்; ஸ்டம்பால் தாக்கிய சிறுவன், சுருண்டு விழுந்த வாலிபர் -திருவாரூரில் பரபரப்பு
தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவர்கள் இன்று மதியம் 2 மணிநேரம் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பின்னர் குழந்தையை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருகின்றனர். அவருக்கு ராபீஸ் நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கப்பட்டு, சிகிச்சை முடிந்துள்ளது. இவர் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.