ஆன்லைன் செயலி மூலம் கடன்! பணத்தை கட்டிய பிறகும் புகைப்படத்தை நிர்வாணமாக்கி மிரட்டல்! சென்னை இளைஞர் தற்கொலை!

Published : May 09, 2024, 01:25 PM ISTUpdated : May 09, 2024, 01:29 PM IST
ஆன்லைன் செயலி மூலம் கடன்! பணத்தை கட்டிய பிறகும் புகைப்படத்தை நிர்வாணமாக்கி மிரட்டல்! சென்னை இளைஞர் தற்கொலை!

சுருக்கம்

கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இதனை பலரும் விரும்புகின்றனர். 

சென்னையில் ஆன்லைன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை முழுவதும் கட்டிய பிறகும் இளைஞருக்கு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இதனை பலரும் விரும்புகின்றனர். இவ்வாறு எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் வழங்கும் செயலிகள் கடனை வசூலிக்கும் விதமே தனி. 

இதையும் படிங்க: சென்னையில் வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்! பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பியது எப்படி?

குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி விதிக்கப்படும்.  நண்பர்கள், உறவினர்கள் நம்பர்களுக்கு கால் செய்து கடனை கட்ட சொல்லுமாறு கூறுவார்கள். அதுமட்டுமல்லாமல்  அவர்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடன் செயலி நிர்வாகத்தினர் அனுப்பி மிரட்டி வருவதால் தற்கொலை செய்யும் சம்பவமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்து ஏராளமான புகார்கள் காவல்துறைக்கும் வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த  கோபிநாத் என்ற இளைஞர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை முழுவதும் கட்டிய பின்னரும்  அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது தொலைபேசியில் உள்ள எண்களுக்கு நிறுத்தினர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல் ஏற்பட்டு கோபிநாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தையும்  வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  

இதையும் படிங்க:  22ம் தேதி காலை 8.30 மணிக்கு நடந்தது என்ன? ஹேமச்சந்திரனின் இதய துடிப்பு நின்றும் மருத்துவமனை செய்த காரியம்!

இதுகுறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!