சென்னையில் வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்! பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பியது எப்படி?

By vinoth kumar  |  First Published May 9, 2024, 12:18 PM IST

சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அசோக் என்ற இளைஞர் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் குறுக்கே இண்டர்நெட் கேபிள் வயர் தொங்கிக்கொண்டு இருந்தது. 


சென்னை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி நிலைதடுமாறி இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியில் சிக்கியது. 

சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அசோக் என்ற இளைஞர் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் குறுக்கே இண்டர்நெட் கேபிள் வயர் தொங்கிக்கொண்டு இருந்தது. இதை கவனிக்காத இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுக்கொண்டிருந்த போது இளைஞரின் கழுத்தில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!

இதனால், நிலைதடுமாறிய கீழே விழுந்து இருசக்கர வாகனமும் அந்த இளைஞரும் மாநகர பேருந்தில் முன் சக்கரத்தில் வந்து விழுந்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். இந்த விபத்தில் அந்த இளைஞருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:  அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்.. அலர்ட் மெசேஜ்.!

இந்த விபத்து தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் பகுதிகளில் இண்டர்நெட் கேபிள் வயர் அடிக்கடி தொங்குவதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

click me!