#BREAKING: உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது இளைஞர் இறந்தது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published May 8, 2024, 12:51 PM IST

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் செல்வதான்(52). இவரது மூத்த மகன் ஹேமச்சந்திரன். பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக எடையை குறைக்கவேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார்.


எடை குறைப்பு சிகிச்சையின் போது புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி நகரைச் சேர்ந்தவர் செல்வதான்(52). இவரது மூத்த மகன் ஹேமச்சந்திரன்(26). பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். இதில் ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக எடையை குறைக்கவேண்டும் என்பதற்காக யூடியூப் மூலமாக மருத்துவர்களை தேடியுள்ளார். அப்போது சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பிரதமரு மதக்கலவரத்தை தூண்டுற மாதிரி பேசுறாரு! உடனே நடவடிக்கை தேவை! நீதிமன்றம் கதவை தட்டிய செல்வப்பெருந்தகை!

இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. ஹேமச்சந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனிடையே, புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை தமிழக மருத்துவத்துறை அமைத்தது. அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது.  இதனையடுத்து தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:  Tamil Nadu Weather update: ஜெய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறக்கப் போகுது.. கோடையில் கொட்டப் போகுது மழை!!

ஹேமச்சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. குறிப்பாக தகுதியான மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்க தாமதமானது தான் இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!