சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப் பெருந்தகை தாக்கல் செய்த மனுவில்: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.
பரப்புரையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தாக்கல் செய்த மனுவில்: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் தேர்தல் பரப்புரையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி மத கலவரத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
undefined
இதையும் படிங்க: Tamil Nadu Weather update: ஜெய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறக்கப் போகுது.. கோடையில் கொட்டப் போகுது மழை!!
தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துகளை பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பிரதமர் பெயரை சேர்த்திருப்பதால் வழக்கை பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னது வேளாண்மைக்கு தடையற்ற மின்சாரமா? அமைச்சரே நிரூபிக்கத் தயாரா? சவால் விடும் அன்புமணி ராமதாஸ்!