நடுரோட்டில் ரெஸ்டாரண்ட் உரிமையாளரை விரட்டி விரட்டி தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.. என்ன காரணம்?

Published : May 03, 2024, 04:39 PM ISTUpdated : May 03, 2024, 04:51 PM IST
நடுரோட்டில் ரெஸ்டாரண்ட் உரிமையாளரை விரட்டி விரட்டி தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.. என்ன காரணம்?

சுருக்கம்

 பட்டினப்பாக்கம் லூப் சாலை சந்திப்பில் முன்னாள் சென்ற கார் வழி விடாமல் சென்றுள்ளது. இதனையடுத்து மணிவண்ணன் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். 

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடுரோட்டில் இளைஞரை துரத்தி துரத்தி தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ஜார்ஜ்டவுன் தாயப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(36). இவர் ஓஎம்ஆர் பகுதியில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். நேற்று மாலை மணிவண்ணன் தனது தோழியுடன் காரில் மெரினா லூப் சாலை வழியாக ஓஎம்ஆரில் உள்ள தனது ரெஸ்டாரண்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: எங்க அம்மாவோட கள்ளக்காதலன் ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணி 3 மாதம் கர்ப்பமாக்கிட்டான்.. கதறும் பள்ளி மாணவி!

அப்போது பட்டினப்பாக்கம் லூப் சாலை சந்திப்பில் முன்னாள் சென்ற கார் வழி விடாமல் சென்றுள்ளது. இதனையடுத்து மணிவண்ணன் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் காரில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து இறங்கி வந்து மணிவண்ணனிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர், 5 பேரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். மேலும் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க:  என்ன நடிப்புடா சாமி! தாலி கட்டிய பொண்டாட்டிய கொலை செய்துவிட்டு நாடகமாடிய பாதிரியார்! சிக்கியது எப்படி?

இந்நிலையில், ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மணிவண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தஒ புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் மணிவண்ணனை தாக்கிய திருவொற்றியூர் பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, ஆயுதப்படை காவல் கோபிநாத், சுடலையாண்டி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கார்த்திக் ராஜா திருவெற்றியூர் கிழக்கு பாஜக பொருளாதார பிரிவு மாவட்டச் செயலாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு