கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
கோவை மக்களவை தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றிவரும் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரகண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கோவை மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க எனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு வந்திருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே முகவரியில் வசிக்கும் எனது மகளின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
undefined
இதையும் படிங்க: மக்களே உஷார்... இந்த 3 நாட்களுக்கு வெப்ப அலை உக்கிரமாக இருக்குமாம்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!
என்னை போன்று எனது தொகுதியில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதி மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவைதொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கவேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் எந்ததெந்த மாவட்டத்தில் மழை பெய்யப்போகுது தெரியுமா?
அப்போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தனது வாதத்தில், மனுதாரரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து 2021ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டோரை மீண்டும் பட்டியலில் இணைத்து ஓட்டுப்போட அனுமதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரும் நீங்கள், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது என்ன செய்தீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கோவை மக்களவைத் தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.