அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் மையமாக இருந்து வரும் நிலையில் ,  அது நாளடைவில் கிழக்காசிய நாடுகளுக்கு மாறக்கூடும் என சிங்கப்பூர் பொது சுகாதாரத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார் . கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கிட்டத்தட்ட அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர் .  அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சாஸ்வீ ஹாக் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் டீன் டீயோ யிங் , இதை கணித்துள்ளார்.  இந்த நோய் பரவல் அடுத்து தெற்காசியாவுக்கு மாறுமா, அல்லது ஆப்பிரிக்கா அல்லது லத்தின் அமெரிக்காவிற்கு மாறுமா என்பது போன்ற சந்தேகங்கள் இருந்து வருகிறது.  

ஆனால்  மையப்பகுதி நிச்சயம் மாறக்கூடியது எனவும்,   நிச்சயம் கிழக்காசிய நாடுகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  முதன்முதலில் இந்த வைரஸ் சீனாவின் வுகானில்  தோன்றியது அதன்பின்னர் 180 நாடுகளுக்கு  பரவியது இது சீனாவில் கொடூரமான தாக்கியதையடுத்து  தற்போது அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிகவும் மோசமாக பாதித்துள்ளது.  இந்நிலையில்  சீனா உள்ளிட்ட  தென்கிழக்கு ஆசிய நாடுகள் தனிமைப்படுத்துதல் மூலம் உள்ளூர் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர் ஆனாலும்  நோய் பரவல் குறைந்தபாடில்லை ,  மீண்டும் சீனாவில் வைரஸ் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது காரணம் வெளிநாடுகளிலிருந்து மக்கள் சீனாவை நோக்கி வருவதே அதற்கு காரணம் என  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

அமெரிக்காவில் கொடூர முகத்தை காட்டி வரும் கொரோனா விரைவில் கிழக்காசிய நாடுகளில் மையம் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் .  இந்த வைரஸ் மக்கள் மத்தியில் பரவி அது மீண்டும் மீண்டும் தன்னுடைய முகாமை மாற்றிக் கொண்டே இருக்கும் தினமும் மக்கள்  அவற்றை எதிர்கொண்டு  நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கிக் கொள்வதன் மூலம் அதன் தாக்கம் நாளடைவில் குறையும்,  என்றும் அல்லது  தடுப்பூசி மூலம் மட்டுமே அதை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.