பாகிஸ்தானில் பப்ளிக் டாய்லெட்டாக மாறிய அனுமன் கோயில்! வைரலாகும் வீடியோ!
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் உள்ள பசுலி ஹனுமான் மந்திர் பொது கழிப்பறையாக மாற்றப்பட்டதை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவலான சீற்றத்தை தூண்டியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் உள்ள பசுலி ஹனுமான் மந்திர் பொது கழிப்பறையாக மாற்றப்பட்டதை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவலான சீற்றத்தை தூண்டியுள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அனார்கலியின் மையத்தில் பசுலி ஹனுமான் மந்திர் எனப்படும் அனுமன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பன்சி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு செழிப்பான இந்து குடும்பத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் 1947இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது கைவிடப்பட்டது.
இந்தக் கோயில் தற்போது பொதுக் கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஹனுமன் கோயிலின் புனிதத்தன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கெடுக்கும் வகையில், கோயில் மண்டபங்களுக்குள் ஆறு கழிப்பறைகள் அமைந்திருக்கும் காட்சியை வீடியோ காட்டுகிறது. இது இந்துக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்று சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த தீவிர ரசிகர்... வீடுதேடிச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!
பசுலி ஹனுமான் மந்திர் இவ்வாறு கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் சீற்றத்தையும் கிளப்பியுள்ளது.
தலைமுறை தலைமுறையாக இந்துக்களால் போற்றப்படும் இந்தப் பழமையான வழிபாட்டுத் தலம், பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தானின் எல்லைகளுக்கு அப்பால், பசுலி ஹனுமான் மந்திரின் அவலநிலை மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மை உரிமைகள் பற்றிய உரையாடல்களை மீண்டும் தூண்டியுள்ளது.
'துபாயில் கோயில் கட்டியதால்தான் வெள்ளத்தில் தத்தளிக்கிறது'; வைரலாகும் பாகிஸ்தானியரின் பேச்சு