நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள்: மலேசியாவில் கோர விபத்து - 10 பேர் பலி!
மலேசியாவில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் சிக்க்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில் நடுவானில் மோதுகிறது. இதையடுத்து, இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகளும், ஹெலிகாப்டர்களின் துண்டுகள் காற்றில் பறக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
HOM (M503-3) மற்றும் Fennec (M502-6) ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இதில், HOM (M503-3) ஹெலிகாப்டரில் ஏழு பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணித்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர்களில் இருந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
மலேசிய கடற்படை தினத்தின் ஒத்திகை நிகழ்ச்சியின்போது, அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் சிக்க்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.