மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புகழ் வணக்க கூட்டம் சென்னை சாந்தோம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். உச்சநீதிமன்ற  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன், கவிஞர் வைரமுத்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராஜேந்திரன், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர்  கலந்து கொண்டு பேசினர்.

நடிகையும், காங்கிரஸ்  கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான  குஷ்பு பேசும்போது நீண்ட இடைவெளிக்கு பின் தி.மு.க. மேடையில் பேசுவது மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தது போன்று உள்ளது என கூறினார்.

நான் தி.மு.க.வில் இணையும் போது, உறுப்பினர் கட்டணம் ரூ.500 கொண்டு போகவில்லை. அப்போது, மு.க.ஸ்டாலின் தான் எனக்கு 500 ரூபாயை வழங்கினார். கையெழுத்து போடுவதற்கு பேனா தர கருணாநிதி மறுத்துவிட, பேனாவும் மு.க.ஸ்டாலினே தந்தார் என குறிப்பிட்டார்..

நான் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அரசியல் ரீதியாக நான் தலைவர் என்று ஏற்றுக்கொண்டது கருணாநிதியை மட்டும் தான் எனவும் எனக்கு அரசியல் நாகரிகம் கற்றுக்கொடுத்தது திமுகதான் எனவும் குஷ்பூ கூறினார்.  அரசியல், மரியாதை, சுய மரியாதை போன்றவற்றை கருணாநிதிதான் எனக்கு கொல்லிக்  கொடுத்தார் என தெரிவித்தார்.

எனது வாழ்வில் கருணாநிதி ஏன் வந்தார் தெரியுமா ? என கலங்கிய குஷ்பூ, மப்பா இல்லா எனக்கு அப்பாவாக, தந்தைப் பாசத்தை என் மீது கொட்டியவர் கருணாநிதி என தெரிவித்தார்.

மறைந்த  திமுக தலைவர் கருணாநிதி அப்பா ஸ்தானத்தில் தனக்கு கிடைத்த மிசச் சிறந்த  நண்பர் என்றும், அவர் முறை தனது முகத்தை துடைத்துவிட்டு கொடுத்த டிஸ்யூ பேப்பரைக் கூட  இன்னும் பத்திரமான எனது லாக்கரில் பத்திரமாக வைத்திருக்கிறேன் என குஷ்பூ தெரிவித்தார்.