அடிச்சு தூக்கிய ஆளுங்கட்சி.. ஆதிக்கத்தை தொடரும் பாஜக..! வீடியோ

நாடு முழுவதும் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் அரியானா (90 தொகுதிகள்), மகாராஷ்டிரா(288 தொகுதிகள்) மாநில சட்டசபைக்கு அக்.,21 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 

First Published Oct 24, 2019, 7:01 PM IST | Last Updated Oct 24, 2019, 7:01 PM IST

நாடு முழுவதும் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் அரியானா (90 தொகுதிகள்), மகாராஷ்டிரா(288 தொகுதிகள்) மாநில சட்டசபைக்கு அக்.,21 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு துவங்கி, பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் தபால் ஓட்டுக்களும், 8.30 மணி முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட தொடங்கின 

தேர்தல் தொடர்பான பல கருத்துகணிப்புக்கள் ஒரே மாதிரி இருந்தாலும், சில கருத்துக்கணிப்புக்கள் மாறுபட்டதாக இருந்தன இந்த  இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் நம்புவதால்,தேர்தல்முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதே போல் தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் வாக்குஎண்ணப்பட தொடங்கின முதல் கட்ட முன்னிலை நிலவரமே சுமார் 8.50 மணிக்குதான் வெளியாயின. முதல் கட்டமாக வெளியான தகவலில் அதிமுக வேட்பாளர் 412 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார் . திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 234 தொகுதிகள் பெற்று பின் தங்கினர் தொடர்ந்து இரு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை முந்தி அதிமுக கூட்டணி முன்னிலைப் பெற்று வந்தது அதிமுக முன்னணி நிலவரத்தை அறிந்து கட்சி அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலும்  அதிமுக கொண்ட ஆரம்பித்து விட்டார்கள் தொண்டரகள் இறுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியை  அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கைப்பற்றி உள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32333 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தோற்கடித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62229 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணன் 94562 வாக்குகளும் பெற்றனர். 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2662 வாக்குகளையும் பெற்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.  விக்கிரவாண்டி தொகுதியை இழந்ததால் திமுகவின் பலம் 100 ஆகக் குறைந்தது. நாங்குநேரி தொகுதியை இழந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 7 ஆக குறைந்தது. இதனை தொடர்ந்து 
விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 44782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். 

திமுக வேட்பாளர் புகழேந்தி 68646 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் புகழேந்தி 101342 வாக்குகள் பெற்று  44782  வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2912 வாக்குகளை மட்டுமே பெற்றார்.  இந்த வெற்றியின் மூலம் திமுக வசமிருந்த சட்டமன்ற தொகுதியை அதிமுக கைப்பற்றி உள்ளது. அதிக வாக்குகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் திமுக கூடாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

அதேபோல் மகாராஷ்டிரா மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 152 தொகுதிகளிலும் சிவசேனா 124 தொகுதிகளிலும் மற்ற சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜகவின் ஆதிக்கம் தொடர்கிறது.