Asianet News TamilAsianet News Tamil

"நல்லாத்தான்பா பாடுறாரு".. மக்கள் செல்வன் குரலில் ஒலிக்கும் "காதல் குமாரு" பாடல் - வைரலாகும் Lyrical Video!

Makkal Selvan Vijay Sethupathi : பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள "கரா" என்கின்ற திரைப்படத்தில் வரும் "காதல் குமாரு" என்கின்ற பாடலை மக்கள் செல்வர் விஜய் சேதுபதி அவர்கள் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க தனது சிறு வயது முதல் போராடிவரும் ஒரு மிகச் சிறந்த நடிகர் தான் மாஸ்டர் மகேந்திரன். ஓரிரு திரைப்படங்களில் நாயகனாக அவர் நடித்திருந்தாலும், அவை பெரிய அளவில் ஹிட்டாகாத நிலையில் தொடர்ச்சியாக தனக்கான வாய்ப்புக்காக அவர் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், பவானி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும் "கரா" என்கின்ற திரைப்படத்தில் அவர் நாயகனாக நடித்திருக்கிறார். இந்திய அளவில் முதலைகள் சம்பந்தமாக எடுக்கப்படும் மிகப்பெரிய திரைப்படமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை பாடியுள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. தற்பொழுது அந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories