Lal Salaam: தலைவர் பிறந்தநாளில் ரஜினி மகள் ரசிகர்களுக்கு கொடுத்த செம்ம ட்ரீட்! 'லால் சலாம்' மாஸ் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 'லால் சலாம் ' படத்தில் இருந்து மொய்தீன் பாய்யின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி உள்ளது. 
 

First Published Dec 12, 2023, 10:15 PM IST | Last Updated Dec 12, 2023, 10:15 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்று முதலே ரசிகர்கள், தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருவதை தாண்டி, பலர் அன்னதானம், முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், மற்றும் கோவில்களுள் ரஜினி பெயருக்கு அர்ச்சனை செய்து... பிரமாண்டமாக கொண்டாடி வந்தனர்.

மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் 170 வது திரைப்படத்தின் டைட்டில், 'வேட்டையன்' என அறிவிக்கப்பட்டது மட்டும் இன்றி, டைட்டில் ரிவீல் வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

இதை தொடர்ந்து, ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டன்ட் கேமியோ ரோலில் நடித்துள்ள... 'லால் சலாம்' படத்தில் இருந்து, மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின்... கிலிம்ஸி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ செம்ம மாஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Video Top Stories