Watch : வெம்பக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வுப் பணிகள்! - 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியில் 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் நுண்கற்கருவிகள், சங்கக்கால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை அடங்கும். இவை கி.மு.3000 முதல் கி.மு.4000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகளுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு நடைபெற்றது. இது, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிறைவுபெற்று ஆய்வின் முடிவின், கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் யாவும் ஆவணப்படுத்தப்பட்டு காலப்பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஏப்.6.ல் தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று வந்த 2ம் கட்ட அகழ்வராய்ச்சி பணியில் தற்போது வரை சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.