சீக்கிரமா பாலம் கட்டுங்க தாத்தா; முதல்வருக்கு க்யூட்டாக கோரிக்கை வைத்த சிறுமி

சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க சி.எம். தாத்தா என மழலை மொழியில் கோரிக்கை விடுத்து சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Feb 4, 2023, 11:25 AM IST | Last Updated Feb 4, 2023, 11:25 AM IST

சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லும் போது காரில் இருந்தபடி ரயில்வே மேம்பாலம் அமைக்க தனது மழலை பேச்சில் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். “சி.எம் தாத்தா நான் சிவகாசியில் இருந்து பேசுகிறேன் தாத்தா, சிவகாசியில் சீக்கிரமா பாலம் கட்டி கொடுங்க, டெய்லி நான் லேட்டா ஸ்கூலுக்கு போறேன் தாத்தா” என ரயில்வே மேம்பாலம் இல்லாமல் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளிக்கு செல்ல தாமதம் ஏற்படுவதாகவும் விரைவில் மேம்பாலம் அமைத்து தாருங்கள்  என மழலை மொழியில் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த சிறுமியின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories