திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி அசத்திய மாணவர்கள்; திருச்செந்தூரில் மாணவர்கள் அசத்தல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். 

First Published Jan 11, 2024, 4:07 PM IST | Last Updated Jan 11, 2024, 4:07 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருச்செந்தூர் வட்டார அளவிலான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 43வது ஆண்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டிகள் திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார அளவிலான 118 மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் வழங்கினார். 

Video Top Stories