பொள்ளாச்சியில் திமுக இளைஞரணி நடத்திய ரேக்ளா பந்தயம்; சீறிப்பாய்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது.

First Published Jan 18, 2024, 7:48 PM IST | Last Updated Jan 18, 2024, 7:48 PM IST

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர்  என போட்டிகள் நடைபெற்றது. இதில்  கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு முதலாவதாக வண்டி ஓட்டினார். திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் கலந்துகொண்ட காளைகள் சீறி பாய்த்தது பார்பவர்களை மிரள செய்தது, இப்போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு ரூ.40 ஆயிரம், 3ம் பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் தங்க நாணயங்கள்  வழங்கப்பட்டன.

Video Top Stories