Asianet News TamilAsianet News Tamil

தேசிய அளவில் 8 அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி... சென்னையில் மார்ச் 6ஆம் தேதி தொடங்குகிறது

 JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  ஸ்ரீகாந்த் மற்றும்  மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The national level cricket match of 8 teams will start in Chennai on the 6th KAK
Author
First Published Feb 23, 2024, 10:57 PM IST

8 அணிகள் மோதும் பிரீமியர் லீக்

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் நடத்தும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி  மார்ச் 6 ஆம் தொடங்கி  9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு சென்னையில் நடைபெற்றது. சென்னையில்  அமீர் மஹால் மற்றும் மெரினா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிகள் கிழக்கு மண்டலம், குஜராத் மண்டலம், KKG (கேரளா, கர்நாடகா மற்றும் கோவா) மண்டலம், மும்பை சந்தன் ஆர்மர், வடக்கு மண்டலம், ROM (Rest of Maharashtra)  மண்டலம், TNAPTS மண்டலம் மற்றும் ராஜஸ்தான் மண்டலம் ஆகிய தேசிய அளவிலான 8 அணிகள் மோதுகின்றன. 

The national level cricket match of 8 teams will start in Chennai on the 6th KAK

25 லட்சம் ரூபாய் பரிசு தொகை

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளின் தொடக்கவிழாவில் 1983 ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும்  மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற உள்ளது.   சென்னையில் ஜிடோ பிரீமியர் லீக் 2024 ஐ நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும்,  இந்தப் போட்டி கிரிக்கெட் பற்றியது மட்டுமல்லாமல்,  விளையாட்டுத் திறன் மற்றும் ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை ஒன்றிணைக்க நடத்தப்படுகிறது என்றும் JITO அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

WPL Opening Ceremony: பிரம்மாண்டமாக தொடங்கிய WPL – ராமையா வஸ்தாவய்யா பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷாருக்கான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios