"தலைவரின்" மாஸ் வசனம்; வேட்டையனில் Recreate செய்த பகத் - வைரலாகும் Deleted Video!

Vettaiyan Deleted Scene : வேட்டையன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி இப்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

First Published Oct 17, 2024, 11:56 PM IST | Last Updated Oct 17, 2024, 11:56 PM IST

கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் வெளியாகி, தற்பொழுது 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது "வேட்டையன்" திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக பிரபல இயக்குனர் டி.ஜே ஞானவியலுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அது மட்டும் இல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர்கள் பகத் பாசில், ரானா நடிகைகள் துஷாரா மற்றும் ரித்திகா சிங், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல மலையாள திரை உலக நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். 

இந்த சூழலில் "வேட்டையன்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தில் வரும் "இருமல்லு.. தும்மலு.. விக்கலு இதெல்லாம் கேட்டு வராது" என்கின்ற மெகா ஹிட் வசனத்தை, பகத் Recreate செய்து அசத்தியுள்ளார். ஆனால் இந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை, தற்போது நீக்கப்பட்ட காட்சியாக லைக்கா நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. 

Video Top Stories