வீடு கட்ட ரூ.2.67 லட்சம் மானியம் வழங்கும் அரசு: 68,569 வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு - விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமரின் கிராமப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான முதல்கட்ட தவணைத் தொகையை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
PMAY Scheme
மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான வீடு இல்லாமல் நாட்டில் பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இதனை குறைக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் கிராமப்புற வீடுகட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதி தவணை முறையில் வழங்கப்படுகிறது.
PMAY Scheme
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் 2024 - 25ம் நிதியாண்டில் தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2029 வரை கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட மத்திய ஊரக வளர்ச்சித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி தமிழகத்தில் 2024 - 25 நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PMAY Scheme
இதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கடந்த செப்டம்பர் 19ம் தேதி எழுதிய கடிதத்தில், கடந்த 2018ம் ஆண்டு தரவுகளில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய, மாநில அரசு சார்பில் இத்திட்டத்தில் நபர் ஒருவருக்கு 2.67 லட்சம் ஒதுக்கப்படும் நிலையில், மத்திய அரசு 60 சவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் 68,569 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக ரூ.209.52 கோடி முதல் தவணையை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
PMAY Scheme
தகுதி
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஒரு முறை பயன் பெற்ற பிறகு, மீண்டும் அதைப் பெற முடியாது
திட்ட பலனை பெறுபவர்களுக்கு ஏற்கனவே காங்கிரீட் வீடு இருக்கக் கூடாது. ஏற்கனவே வீடு வாங்க அரசு மானியம் பெற்றிருக்கக் கூடாது.
பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
PMAY Scheme
பயனாளியின் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.
21 சதுர அடிக்கும் குறைவான வீடு உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இணையலாம்.
திருமணமான தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ, இந்த திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு தகுதி இருக்கும் பட்சத்தில் ஒரு தனி வீடு பெற தகுதி உடையவர் ஆவர்.