இரவில் நடந்த கோர விபத்து: சென்னையில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்கள் ரத்து
திருவள்ளூர் அருகே ஏற்பட்ட கோர ரயில் விபத்து காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் சில முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தர்பங்கா நோக்கி புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயில் இரவு 9.30 மணி அளவில் கவரப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 குளிர்சாதனப் பெட்டிகள் தடம் புரண்டதில் 19 பேர் காயம் அடைந்தனர். மேலும் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலும் சேதம் அடைந்தன. தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் பெட்டிகளை சரிசெய்யும் பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது.
சென்னை அருகே ரயில் விபத்து; தேவையான அனைத்து பணிகளும் துரிதமாக நடக்கிறது - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!
சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பகல் 3.30 மணிக்கு விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மணிநேர போராட்டம்; திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம் - பைலட்டுக்கு குவியும் பாராட்டு!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்படும். அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் தேதி அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் புறப்பட்ட நவஜீவன் விரைவு ரயில் கூடூர், ரேனிகுண்டா, அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.