Heavy Rain in Chennai: சென்னையில் அதி கனமழை; சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்த கூட்டம்!

Heavy Rain in Chennai: அக்டோபர் 15, 16 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க படையெடுத்து வருகின்றனர்.

Heavy rain warning in Chennai: Crowds in supermarkets tvk

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 15, 16ம் தேதி வாக்கில் தொடங்க உள்ளதாக வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 15 மற்றும் 16ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! திமுக நிர்வாகிகளே தயார் நிலையில் இருங்க! தலைமைக்கழகம் அதிரடி

நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கையில் இரவு பகலாக எடுத்து வருகிறது. துணை  முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி பம்பரமாக சுழன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர் பணிகள் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 

இதையும் படிங்க: Heavy Rain in Chennai: அதி கனமழை எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

இந்நிலையில் சென்னை கனமழை பெய்யும்  என்பதால் ஓரிரு நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, காய்கறிகள், குழந்தைகளுக்கான பிஸ்கட், தின்பண்டங்கள் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதோடு, இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் உள்ளனவா என்று கவனித்து வைத்துக்கொள்ளவும், இல்லாத பொருட்களை மட்டும் அளவாக வாங்கிக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios