Tamil News live : மின் கட்டண உயர்வு - போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை
சுருக்கம்
மின் உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 23ம் தேதி பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கோப்ராவிற்கு பிறகு சேலை கிளாமருக்கு மாறிய கேஜிஎப் நாயகி!
முன்னணி நடிகைகள் பலர் அரைகுறை ஆடையுடன் வந்து கலந்து கொள்ளும் நிலையில் கேஜிஎப் என்னும் மிகப்பெரிய வெற்றி பட நாயகி அடக்கமாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
நாங்கள் தற்போது சேட்டிலைட் நட்சத்திரங்கள் இல்லை..கிச்சா சுதீப்!
அவர்கள் எங்களை சாட்டிலைட் நட்சத்திரங்கள் என்று அறிந்தார்கள் எங்களுக்கு திரையரங்கில் ரிலீஸ் கிடைத்த நேரம் இது. இப்போது நாங்கள் நட்சத்திரங்களாக இருக்கிறோம் என சுதீப் கூறியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அல்லது அதற்கு பின்னரோ வேலை நிறுத்தம் செய்வதாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?.
நித்யா மேனன் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் தான் அவர் மணமுடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
. மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்து மாஸ் காட்டிய எடப்பாடி.. அல்லு தெறிக்கும் திமுக.
தமிழக அரசின் வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...மேலும் படிக்க
05:27 PM (IST) Jul 19
கள்ளக்குறிச்சி விவகாரம் - மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அதிரடி மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்.பி., செல்வக்குமார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத்தும், எஸ்.பியாக பகலவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
04:49 PM (IST) Jul 19
புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!
பேட்டியில் புஷ்பா பார்ட் 2 வில் நானும் இருக்கிறேன். இது மிகவும் நல்ல கதை. பாகம் மூன்றும் தயாராகும் என இயக்குனர் தன்னிடம் தெரிவித்ததாக பகத் பாசில் கூறியுள்ளார்.
சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்
தமிழ் சினிமாவிற்கும் சம்பந்தமில்லாத புது விதமான முயற்சியில் இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட் அடிப்படையில் எடுத்து உள்ளேன். அதில் எனக்கு வியாபார நோக்கம் இல்லை கூறியுள்ளார் பார்த்திபன்.
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி... மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மற்றும் ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் மாற்றம்!!
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக பகலவன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரும் மாற்றபட்டதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 2021-22ம் ஆண்டில் 78 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. 560 வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று எம்.பி மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
03:21 PM (IST) Jul 19
நீதிபதியையே ரவுண்டு கட்டிய சவுக்கு சங்கர்..! வழக்கு போட சொல்லி அதிரடி காட்டிய மதுரை ஹைகோர்ட் நீதிபதி
யூ டியுப்பர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை கிளை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!
காஃபி வித் கரனில் நடிகர் அக்ஷய் குமார், நடிகை சமந்தா பங்கேற்றுள்ளனர். இதில் பல கேள்விகளும் இருவரும் வெளிப்படையாக பதில் அளித்துள்ள நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் மாஸ் டேன்ஸ் ஒன்றையும் ஆடியுள்ளனர்.
நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல்... மத்திய அரசு கூறிய அதிர்ச்சி தகவல்
நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என்பதற்கு, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. நீட் விலக்கு மசோதா குறித்து எம்.பி வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
01:56 PM (IST) Jul 19
சீராக மின்சாரம் கொடுக்க வக்கு இல்ல, இதுல மின்கட்டண உயர்வு வேறு.. திமுக அரசை பழிக்கு பழி தீர்த்த ஜெயக்குமார்.
சீராக மின்சாரம் வழங்குவதற்கு திமுக அரசுக்கு வக்கு இல்லை என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில்கூட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியது, ஆனால் நாங்கள் அப்போதும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க
01:46 PM (IST) Jul 19
எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செல்லாது..! இபிஎஸ்க்கு செக் வைத்த ஓபிஎஸ் அணி
சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...
01:31 PM (IST) Jul 19
ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?
பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை, என்னதான் அழகாக மேக்கப் போட்டு கொண்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ், அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றிற்கு போஸ் கொடுத்தாலும், அதில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் இது நாம் தானா? என கேட்க்கும் அளவிற்கு இருக்கும். மேலும் பார்க்க...