கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. தமிழக அரசு அதிரடி முடிவு !

கள்ளக்குறிச்சி விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Formation of committee to inquire into Kallakurichi riots

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார்.  இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் சடலத்தை வாங்க மறுத்த அவரது பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Formation of committee to inquire into Kallakurichi riots

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்

இதையடுத்து மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவால் மறு பிரேத பரிசோதனை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால்  மகள் ஸ்ரீமதியின்  உடலை மறுபிரேத பரிசோதனையை  தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் 3 மருத்துவர்கள் குழு மூலம் நடத்தக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்  உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Formation of committee to inquire into Kallakurichi riots

இந்த சூழலில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வை அவரது பெற்றோர் இல்லாமலே நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios