கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்
மாணவி உயிரிழந்த அன்று பள்ளி தாளாளரின் மகன் நள்ளிரவில் பள்ளிக்குள் சென்ற காட்சி என ஜூலை 13-ம் தேதி 10.30 மணியளவில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் இயங்கிவரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13 ஆம் தேதி அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று பள்ளி முன்பாக அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசியதோடு, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். அதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகள் அனைத்திற்கும் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேலும் செய்திகளுக்கு..மச்சி சைட்டிஷ் வாங்கிட்டு வா.. மது போதையில் நண்பனை போட்டு தள்ளிய நண்பர்கள்.!
கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்திருந்த போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற, டிஐஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். வகுப்பறைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதில் பள்ளியில் படித்து வரும் 4,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் சாம்பலாகின.
வீடியோ பதிவுகள் மூலம் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர். மாணவி உயிரிழந்த அன்று பள்ளி தாளாளரின் மகன் நள்ளிரவில் பள்ளிக்குள் சென்ற காட்சி என ஜூலை 13-ம் தேதி 10.30 மணியளவில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போலியானது என்று தற்போது காலம் கடந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..புதிய கட்சியை தொடங்கும் சசிகலா? பதறும் இபிஎஸ் - ஓபிஎஸ்.. அதிமுக என்னவாகும்?
கள்ளக்குறிச்சி காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வேறு இடத்தில் நடந்த வீடியோவை கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய்செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சிசிடிவி வீடியோ யூடியூப், முகநூல்,வாட்ஸ்அப் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளுக்கு மேல் சென்ற வீடியோவை காலம் கடந்து காவல்துறையினர் இப்போது தகவல் வெளியிட்டிருக்கின்றனர் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..நல்லவன் ஆன்மிகவாதி ஆக முடியாது..அன்னபூரணி அரசு அம்மா ரிட்டர்ன்ஸ் - நெட்டிசன்கள் கலாய்