மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்து மாஸ் காட்டிய எடப்பாடி.. அல்லு தெறிக்கும் திமுக.
தமிழக அரசின் வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி, இந்த வீடியோ திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கிய நசுங்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு வேலைவாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர், மக்களை காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்த திராவிட மாடல் நாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்து வாய்ச்சவடால் வீரர்களாக திரியும் அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் மக்களை வஞ்சிக்கும் செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியின் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை " இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்" என்று காராகிருஹத்திற்குள் அடைக்கும் செயல் ஒன்றையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் இந்த வீடியோ அதிமுக அரசு, மக்களை காக்கும் கடமையில் இருந்து தவறுகிறது. 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை விடியா திமுக அரசு தாக்கல் செய்யும்போது, வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார் தட்டி விட்டு, துறைதோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கழிவுநீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது, உட்பட மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் காய்கறிகள் போன்றவற்றில் இமாலய விலை உயர்வுகளால் பரிதவிக்கும் அப்பாவி மக்களை இந்த கொடுங்கோல் ஆட்சியின் கொடூர கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில்.
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை பொருத்தமட்டில் ஒருங்கிணைந்த சென்னை மாநகரில் 25-7-2022 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.