சீராக மின்சாரம் கொடுக்க வக்கு இல்ல, இதுல மின்கட்டண உயர்வு வேறு.. திமுக அரசை பழிக்கு பழி தீர்த்த ஜெயக்குமார்.

சீராக மின்சாரம் வழங்குவதற்கு திமுக அரசுக்கு வக்கு இல்லை என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

 

Former minister Jayakumar condemned the hike in Tamil Nadu government's electricity tariff.

சீராக மின்சாரம் வழங்குவதற்கு திமுக அரசுக்கு வக்கு இல்லை என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில்கூட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியது, ஆனால்  நாங்கள் அப்போதும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசின் நெருக்கடியால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது எனக் கூறி மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அதாவது திமுக அரசு பொய் வழக்கு போடுவதை கண்டித்து மனித உரிமை ஆணையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்று சாட்சியமளிக்க அவர் நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

Former minister Jayakumar condemned the hike in Tamil Nadu government's electricity tariff.

திமுக என் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது, அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் எனக்கு செய்து தரவில்லை, என்னை மிகவும் சித்திரவதை செய்தது. எனவே அதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தேன், நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் என்னை கைது செய்து என் மீது பொய் வழக்குப் போட்டது என்றார், எனவே என்னை கைது நடவடிக்கைக்கு உட்படுத்திய 8 காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதில் மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:  மெரினாவை போராட்ட களமாக்க பயங்கர திட்டம்.. ஏராளமான போலீசார் குவிப்பு.. 4 மாணவர்கள் அதிரடி கைது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகள் குறித்து  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சபாநாயகருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம், ஆனால் அதிமுகவில் அதிகாரம் படைத்தவர் எடப்பாடிபழனிசாமி தான் என்றார். மேலும் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், சீரான மின்சாரம் வழங்க  திமுக அரசுக்கு வக்கு இல்லை, அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் வன வலியுறுத்தியதுடன், இல்லையென்றால் மானியத்தை குறைத்து விடுவோம் என எச்சரித்தனர், ஆனால் நாங்கள் மின் கட்டணத்தை உயர்த்தவை இல்லை, 

இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு உடற்கூராய்வு.!உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா.?உச்சநீதிமன்றம் கேள்வி

Former minister Jayakumar condemned the hike in Tamil Nadu government's electricity tariff.

தமிழக மக்கள் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த அரசு தள்ளியுள்ளது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது. மக்களுடைய வருமானம் பொருளாதாரத்தை உயர்த்த  எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு இப்போது மத்திய அரசின் மீது பழி போடுகிறது, தமிழகத்தை இருளில் இந்த அரசு தள்ளியுள்ளது,  கையாலாகாத அரசாக திறமையில்லாத அரசாக இந்த அரசு உள்ளது இவ்வாறு அவர் கடுமையாக சாடினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios