மெரினாவை போராட்ட களமாக்க பயங்கர திட்டம்.. ஏராளமான போலீசார் குவிப்பு.. 4 மாணவர்கள் அதிரடி கைது.

உயிரிழந்த கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறலாம் என போலீசாருக்கு உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Police security has been provided as there may be a protest in Marina in support of the student

உயிரிழந்த கள்ளக் குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறலாம் என போலீசாருக்கு உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் விவேகானந்தர் இல்லம் தொடங்கி கண்ணகி சிலை வரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மெரினா கடற்கரை முழுவதும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து அதில் தவறான வதந்தி பரப்பி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக கூறி சென்னையை சேர்ந்த நான்கு மாணவர்களை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி போலீசார்  கைது செய்துள்ளனர்.

Police security has been provided as there may be a protest in Marina in support of the student

இது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்தார் 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மாணவி விவகாரத்தில் அரசும் காவல் துறையும் மெத்தனமாக செயல்படுவதுடன் பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பள்ளியின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போது கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற போலீசார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையும் படியுங்கள்: மாணவியின் தாய்க்கு அரசு வேலை..? மாணவர்களுக்கு மீண்டும் சான்றிதழ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி.

இந்த விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் அதிகமானோரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர். 17-ஆம் தேதி வெடித்த வன்முறை தொடர்பாக தொடர்ந்து போலீசார்  கைது படலத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தின் மூலமாக வன்முறையை தூண்டும் வகையில் தவறான வதந்திகளை பரப்பிய 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல Justice For Srimathi என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அதில் 2500 பேரை சேர்த்து வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதாக சென்னையை சேர்ந்த நான்கு மாணவர்களை அண்ணாசாலை மற்றும் திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police security has been provided as there may be a protest in Marina in support of the student

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுனில் என்ற  செந்தமிழன் என்ற  மாணவரை அண்ணாசாலை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் உருவாக்கிய வாட்ஸ்அப் குழுவில் முதல்வரின் கான்வாயை வழிமறித்து அவரது கண்ணில் நமது போராட்டம் படும் வகையில் நடத்த வேண்டும் என்றும் அவர் அதில் கூறி போராட்டத்தை தூண்டியதாக ஆடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதேபோல் திருவல்லிக்கேணி போலீசார்  ஆரோக்கியராஜ், ஆகாஷ் மற்றும் அரவிந்தன் ஆகிய மாணவர்களையும் கைது செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்:பள்ளிக்கு விடுமுறை அளித்தது ஏன்..? விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு

அதேநேரத்தில் மாணவிக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக வாட்ஸ்அப் குழு மூலமாக தவறாக வதந்தி பரப்பி  போராட்டத்தை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios