கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்:பள்ளிக்கு விடுமுறை அளித்தது ஏன்..? விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை, இதனையடுத்து அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
 

Tamil Nadu government issues notice to schools that are not functioning in protest against the Kallakurichi riots

பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்

கள்ளக் குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. பள்ளியில் இருந்த பேருந்துகள், மாணவர்களின் டிசிகள், மேஜை, நாற்காலிகள் எரிக்கப்பட்டது. இதனை கண்டிக்கும் வகையில் நேற்று பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால் விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் அதாவது 91% பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியதாகவும், 987 பள்ளிகள் (9% ) மட்டும் இயங்கவில்லை என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்

ஒரே பள்ளியில் நிகழ்ந்த 5 மரணங்கள்.. சுவரில் இருந்தது ரத்தக்கறை இல்லை பெயிண்ட்..? சர்ச்சையாகும் சக்தி பள்ளி

Tamil Nadu government issues notice to schools that are not functioning in protest against the Kallakurichi riots

பள்ளிகளுக்கு நோட்டீஸ்

11 மாவட்டங்களில் 100% தனியார் பள்ளிகள் செயல்பட்டுவருவதாகவும், வன்முறை நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92% பள்ளிகள் இயங்கிவருவதாகவும், மிகக்குறைந்த பட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 32% பள்ளிகள் மட்டுமே இயங்கியதாகவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்திருந்தது. அரசின் உத்தரவையும் மீறி அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு  மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios