ஒரே பள்ளியில் நிகழ்ந்த 5 மரணங்கள்.. சுவரில் இருந்தது ரத்தக்கறை இல்லை பெயிண்ட்..? சர்ச்சையாகும் சக்தி பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் கடந்த காலங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாணவி பள்ளியின் 2 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
 

Srimathi death case- Shakti international School Controversies

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் கடந்த காலங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாணவி பள்ளியின் 2 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Srimathi death case- Shakti international School Controversies

ஆனால் மாணவியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர் கடந்த 4 நாட்களாக அமைதியான முறையின் மாணவியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று அது வன்முறையாக வெடித்துள்ளது. நேற்று காலை மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனபதை வலியுறுத்தி, சென்னை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள சக்தி பள்ளியை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று, முற்றுகையில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...! தனியார் பள்ளி ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். அப்போது திடீரென்று பேரணியில் நுழைந்த கும்பல், காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில், அவர்களை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் திணறினர். விழுப்புரம் சரக டிஐஜி உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல்,  பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கியது. அதுமட்டுமில்லாமல், 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

Srimathi death case- Shakti international School Controversies

பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எரித்துள்ளனர். இதனையடுத்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தை கலைந்து செல்ல வலியுறுத்தி, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அண்டை மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறை அதிரடி படையினர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைத்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்...! பள்ளியை சூறையாடிய இரண்டு முக்கிய அமைப்பின் நிர்வாகிகள் கைது
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் தாக்குதலுக்குள்ளான பள்ளியை பார்வையிட்டனர். பின்னர் வன்முறையின் பின்னணி குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டு, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்படும் என்றும் கூறினார். அதனை தொடர்ந்து, இன்று பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியுள்ளது. 

Srimathi death case- Shakti international School Controversies

மேலும் மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு உடல் கூராய்வின் போது மாணவியின் தந்தை அவரது வழக்கறிஞருடன் உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சக்தி பள்ளி குறித்து வெளிவரும் தகவல் அனைத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த காலங்களில் அப்பள்ளியில் 4 மாணவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் மரணமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 3 வது மாடியில் ஸ்ரீமதி விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் விழுந்த இடத்தில் இரத்தக்கறை எதும் இல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க:மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய உத்தரவு .. தந்தை உடனிருக்க நீதிமன்றம் அனுமதி

ஆனால் அதே நேரத்தில் மாடிக்கு செல்லும் இடங்களில் சுவற்றில் இரத்தக்கறை இருந்ததை போலீசார் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி இறப்பதற்கு முன்பாக அவரது உடலில் புதிதாக காயங்கள் இருந்ததாகவும் அவரது உள்ளாடைகளில் இரத்தக்கறை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மார்பு விலாப்பகுதியில் எலும்பு முறிவு இருந்ததாகவும் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Srimathi death case- Shakti international School Controversies

இந்நிலையில் இதே பள்ளியில் கடந்த 2003, 20904, 2005 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் மர்ம மரணங்கள் மக்களிடையே பல்வேறு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இதே போன்று பள்ளி சூறையாடப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது. இதனிடையே இதே பள்ளியில் சந்தேகத்தின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவி மரணம் தற்போது நடந்துள்ளது. இதனால் இதுக்குறித்து விரிவான விசாரணை வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க:கலவரத்துக்குள்ளான பள்ளியில் தொடரும் மரணங்கள்..? அன்றே ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட்.. வைரலாகும் நோட்டீஸ்

ஆனால் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில், இதுவரை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அனைத்து மரணங்களும் தற்கொலை என்று காவல்துறையினரே உறுதி செய்துள்ளனர். மாணவர்களின் மரணங்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே போல் மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் சுவரில் ரத்தக்கறை இருப்பதாக கூறுவது தவறு என்றும் அது பள்ளியின் சுவரில் அடிக்கப்பட்ட பெயிண்ட என்றும் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு எதிராக சிலர் தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளனர். இதனிடையே பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், வேதியியல் ஆசிரியர் உள்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios