Tamil News Highlights : விரைவில் பேருந்து கட்டணம் உயரும்... தமிழக அரசை கண்டித்த ஈபிஎஸ்!!

Tamil News live updates today on august 8 2022

'சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது. குடியிருப்புகளுக்கு நூறு சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது. மக்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள். ஒருபக்கம் மின்கட்டண உயர்வு, இன்னொரு பக்கம் சொத்து வரி உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயரப்போகிறது' என்று தமிழக அரசை கடுமையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

9:02 PM IST

முதல்வர் ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி

மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை பெரும் சுமையாக மக்கள் கருதுகின்றனர். அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது.

மேலும் படிக்க

9:01 PM IST

மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும் !!

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

மேலும் படிக்க

5:18 PM IST

சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத்திற்கு 14 நாள் நீதி மன்ற காவல்... சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உத்தரவு.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா செய்தி தொடர்பாளர், எம்.பி சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டே என சிவசேனா கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இது ஏற்கனவே அக்கட்சி தொண்டர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சிக்கு மத்தியில்தான் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்குதலுக்கு நெருக்கமான அக்காட்சியின் எம்பி சஞ்சய் ராவத் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க

5:16 PM IST

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு: செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

44வது செஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை 9ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில்  பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

5:15 PM IST

தமிழக முதலமைச்சர் தலைமையில் பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு.. மாஸா அறிவித்த அமைச்சர் பொன்முடி.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஏற்கனவே  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர்- மாநில அரசு இடையே மோதல் இருந்து வரும் நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் படிக்க

5:07 PM IST

அரசு பேருந்துகள் சேவை திடீர் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக கேரள அரசு பேருந்துகள் சேவை திடீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:06 PM IST

மீண்டும் வருகிறது 8 வழிச்சாலை.. தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.

மேலும் படிக்க

4:26 PM IST

ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..

2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக.25 தொடங்கி அக்.21 வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

1:23 PM IST

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு.. ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பன்னீர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார்.

12:33 PM IST

இளம்பெண் மீதான தீராத ஏக்கம்! கம்பு கொல்லையில் வைத்து கதற கதற பலாத்காரம்!வெறி தீராததால் என்ன செய்தார் தெரியுமா?

திருப்பத்தூர் அருகே இளம்பெண் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

12:32 PM IST

மின்சார சட்டதிருத்த மசோதா.. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர் ஓம் பிர்லா

மின்சார சட்டதிருத்த மசோதாவுக்கு திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்தார். மின்சார மசோதா குறித்து அமைச்சர் ராஜ்குமார் சிங் விளக்கம் அளித்தார்.

12:00 PM IST

கவனத்திற்கு.. முக்கிய செய்தி !! பொறியியல் கலந்தாய்வு எப்பொது.? உயர்கல்வித்துறை புதிய தகவல்

நீட் தேர்வு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க

11:59 AM IST

அலர்ட் மாணவர்களே !! பொறியியல் படிப்பு புதிய பாடத்திட்டம் .. 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிய அண்ணா பல்கலை.,

மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடதிட்டம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

11:58 AM IST

திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கு.. வி.பி. துரைசாமி

அனைத்து மாநிலங்களோடும் இணக்கமாக இருந்து பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் 8 கோடி மக்களின் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கில் இருந்து வருவது உண்மைதான் என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார். 

11:49 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். 

10:18 AM IST

எந்த தாய்க்கு இதுபோல நடக்கக்கூடாது.. கடவுளே.. தாய் கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பிள்ளைகள்..

ஸ்கூட்டி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி விழுந்த 2 சிறுவர்கள், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

10:02 AM IST

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பை மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கலாகிறது

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவதற்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. குறைந்தபட்ச, அதிகபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இம்மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

9:55 AM IST

நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புதூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அததிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புக்கிரவாரி அருகே விளைநிலத்தில் நகைகள் சிதறி கிடந்துள்ளது.

9:29 AM IST

‘இந்தி தெரியாது போடா’னு சொல்லிட்டு... இப்போ இந்தி படத்தை வெளியிடுவது ஏன்? - சர்ச்சைகளுக்கு உதயநிதி சொன்ன பதில்

அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக முதன்முறையாக இந்தி படத்தை வெளியிடுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.மேலும் படிக்க

9:21 AM IST

குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற இந்து மக்கள் கட்சி பிரிவு தலைவர் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க

8:26 AM IST

காமன்வெல்த் போட்டி: 18 தங்க பதக்கங்களுடன் இந்தியா 5வது இடம்

காமன்வெல்த் போட்டியில் 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல பதக்கங்களடன் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. கடைசி நாளான இன்று 5 தங்க பதக்கங்களுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 

8:11 AM IST

கர்ப்பமான மகள்... மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த் - உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் குடும்பம்

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளாராம். இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

7:44 AM IST

கத்திப்பாரா மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை விபத்து - இளைஞர் உயிரிழப்பு

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க

7:40 AM IST

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு...இந்த ராசிகளுக்கு வாழ்வில் செல்வம் பெருகும்....

Horoscope Today- Indriya Rasipalan August 8 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் காரணமாக இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:39 AM IST

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இப்போ தண்டனையை அனுபவிக்கிறாங்க.. OPSஐ மறைமுகமாக விமர்சித்த? டிடிவி.தினகரன்.!

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியால் திமுகவிற்கு ஆட்சியை கொடுத்த மக்கள் இன்றைக்கு ஏன் வாக்களித்தோம் என்று வருந்தி கொண்டிருப்பதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:39 AM IST

நீங்க டாஸ்மாக்ல விக்கிறீங்களே.. அது போதைப்பொருள் இல்லாமல் கோயில் தீர்த்தமா? ஸ்டாலினை வறுத்தெடுத்த சீமான்.!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் மூலைமுடுக்கெல்லாம் அதிகரித்துள்ளது என்பதை அரசே ஒப்புக்கொள்கிறதா?  என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

9:02 PM IST:

மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை பெரும் சுமையாக மக்கள் கருதுகின்றனர். அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். சொத்துவரியையும் அரசு உயர்த்தியிருக்கிறது.

மேலும் படிக்க

9:01 PM IST:

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

மேலும் படிக்க

5:18 PM IST:

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா செய்தி தொடர்பாளர், எம்.பி சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டே என சிவசேனா கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இது ஏற்கனவே அக்கட்சி தொண்டர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சிக்கு மத்தியில்தான் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்குதலுக்கு நெருக்கமான அக்காட்சியின் எம்பி சஞ்சய் ராவத் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க

5:16 PM IST:

44வது செஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை 9ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில்  பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

5:15 PM IST:

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஏற்கனவே  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர்- மாநில அரசு இடையே மோதல் இருந்து வரும் நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் படிக்க

5:07 PM IST:

டீசல் தட்டுப்பாடு காரணமாக கேரள அரசு பேருந்துகள் சேவை திடீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:06 PM IST:

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.

மேலும் படிக்க

4:26 PM IST:

2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக.25 தொடங்கி அக்.21 வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

1:23 PM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பன்னீர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார்.

12:33 PM IST:

திருப்பத்தூர் அருகே இளம்பெண் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

12:34 PM IST:

மின்சார சட்டதிருத்த மசோதாவுக்கு திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்தார். மின்சார மசோதா குறித்து அமைச்சர் ராஜ்குமார் சிங் விளக்கம் அளித்தார்.

12:00 PM IST:

நீட் தேர்வு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க

11:59 AM IST:

மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடதிட்டம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அண்ணா பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

11:58 AM IST:

அனைத்து மாநிலங்களோடும் இணக்கமாக இருந்து பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் 8 கோடி மக்களின் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கில் இருந்து வருவது உண்மைதான் என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார். 

3:33 PM IST:

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். 

10:18 AM IST:

ஸ்கூட்டி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி விழுந்த 2 சிறுவர்கள், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

10:02 AM IST:

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவதற்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. குறைந்தபட்ச, அதிகபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இம்மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

9:55 AM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புதூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அததிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புக்கிரவாரி அருகே விளைநிலத்தில் நகைகள் சிதறி கிடந்துள்ளது.

9:29 AM IST:

அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக முதன்முறையாக இந்தி படத்தை வெளியிடுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.மேலும் படிக்க

9:21 AM IST:

தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க

8:26 AM IST:

காமன்வெல்த் போட்டியில் 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல பதக்கங்களடன் 5வது இடத்தில் இந்தியா உள்ளது. கடைசி நாளான இன்று 5 தங்க பதக்கங்களுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 

8:11 AM IST:

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளாராம். இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:20 AM IST:

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க

7:40 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan August 8 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் காரணமாக இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:39 AM IST:

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியால் திமுகவிற்கு ஆட்சியை கொடுத்த மக்கள் இன்றைக்கு ஏன் வாக்களித்தோம் என்று வருந்தி கொண்டிருப்பதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

7:38 AM IST: