ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..

2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக.25 தொடங்கி அக்.21 வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 

BE Admission Counselling in august 25th started - Higher Education Minister

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக சிபிஎஸ்சி முடிவு தாமதாமாக வெளியாகி உள்ளதால், பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று பேசிய அமைச்சர், இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை கொஞ்சம் நீட்டிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது என்றார். 

மேலும் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்தார்.  முன்னதாக ஆக.22-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

மேலும் படிக்க:கத்திப்பாரா விபத்து.. நிவாரண தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் !

நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கக்கின்ற நிலையில், கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார். ஏனெனில், பொறியியல் படிப்பில் விண்ணப்பம் செய்து விட்டு, நீட் தேர்வு எழுதி தேர்வானால் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால் பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது. இந்த நிலையை சரி செய்யும் வகையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பமடைய தேவையில்லை.  பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சமூக நிதி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று அவர் கூறினார். மேலும் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்களை தவிர்க்கும் வகையில் கலந்தாய்வில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:கவனத்திற்கு.. முக்கிய செய்தி !! பொறியியல் கலந்தாய்வு எப்போது.? உயர்கல்வித்துறை புதிய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios